புதிய கமிஷனருக்கு காத்திருக்குது சவால்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
02:30



குரோம்பேட்டை : கன மழையால் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்குவதை தடுக்க, புதிய கமிஷனர் போர்கால நடவடிக்கைகளை துரித்தப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.




தொடர் கன மழையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தாம்பரத்தில் இரும்புலியூர், அருள், லட்சுமி, டி.டி.கே., அஞ்சுகம் நகர்கள், விக்கி கார்டன் ஆகிய பகுதிகளில், குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கிஉள்ளது.குரோம்பேட்டை கிழக்கு பகுதிகளான, நேதாஜி, ஜெயின், மாருதி, ஏ.கே., ராம்பட்சி, ஏ.ஜி.எஸ்., குறிஞ்சி, ஐஸ்வர்யா நகர்கள், சூர்யா அவென்யூ, பஜனை கோவில் தெருக்கள், ஒவ்வொரு மழையிலும் தத்தளிக்கின்றன.பீர்க்கண்கரனையில், குறிஞ்சி, செண்பகம், ரோஜா தெருக்களில் குடியிருப்புகளில், 3 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கி, மக்கள் வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாம்பு, பூச்சிகள் தொல்லையால் கதவுகளை மூடியே வைக்கும் சூழல் நிலவுகிறது.பம்மலில், அண்ணா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, லட்சுமி நாராயணா நகர், காந்தி ரோடு, சிக்னல் ஆபிஸ் சந்திப்பு, மூங்கில் ஏரி, பிரசாந்தி நகர் ஆகிய பகுதிகளில், 100க்கும் அதிகமான குடியிருப்புகள் மழை நீரில் மூழகியுள்ளன. செம்பாக்கத்தில், வள்ளல் யூசப் தெரு, திருமலை நகர், சத்யசாய் நகர், ஸ்டெல்லஸ் அவென்யூ பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.அனகாபுத்துாரில், பாலாஜி நகர், பாண்டியன் தெரு, பாரி நகர், அன்னை பில்டர்ஸ், திரு நகரிலும், திருநீர்மலையில் வி.ஜி.என்., குடியிருப்பு, ரங்கா நகரிலும் மழை நீர் தேங்கிஉள்ளது.ஒவ்வொரு மழைக்கும், இப்பகுதிகளில் வெள்ளம் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. அப்படியிருந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதுவரை போதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, பழைய பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழை நீர் தேங்குவதை தடுக்க, பொறியியல் பிரிவில் தற்போதுள்ள அதிகாரிகள் முதல் யாருமே தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை.மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தனர். இந்நிலையில், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு, புதிய கமிஷனரும் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கமிஷனர், ஏற்கனவே செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்தவர் என்பதால், அவருக்கு இப்பகுதிகளின் நிலை நன்கு தெரியும். அதனால், வெள்ளம் தேங்கும் பகுதிகளை முறையாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க, போதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய சவால் அவருக்கு காத்திருக்கிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X