மானாமதுரை:மானாமதுரை பிருந்தாவனம் தெரு ஆனந்தன் 42. இவரது மனைவி மல்லிகா 35. இருவரும் தச்சு தொழில் செய்பவர்கள்.இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுஉள்ளது. அதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகே வைகை ஆற்றில் இறங்கி மல்லிகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆற்றின் இரு கரையிலும் தண்ணீர் செல்லும்நிலையில் பெண் ஆற்றிற்குள் இறங்கியது பதட்டத்தை ஏற்படுத்தியது. போலீசார் ஆற்றிற்குள் இறங்கி பெண்ணை மீட்டனர்.