காரைக்குடி:குன்றக்குடி அருகேயுள்ள கோயில் பகுதிக்கு வருபவர்களை அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி சிலர் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக குன்றக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குன்றக்குடி கண்ணன் 28, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் 35, காரைக்குடி பாண்டி 35, திருமலைச்சாமி 31, மீனாட்சிசுந்தரம் 35 ஆகியோரைக் கைது செய்தனர்.