நவம்பரில் நேற்று வரை கொட்டித் தீர்த்தது... 2015க்கு பின் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு; முடிச்சூர், ஆவடியிலும் பொதுமக்கள் தத்தளிப்பு-
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 நவ
2021
05:25
பதிவு செய்த நாள்
நவ 28,2021 02:35

சென்னையில் 2015ம் ஆண்டுக்கு பின், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 100 செ.மீ., மழை பெய்துள்ளது. மாதம் முழுதுமாக முடிய இன்னும் மூன்று தினங்கள் உள்ள நிலையில், 10 செ.மீ., மழை கூடுதலாக கிடைத்தால், இந்த மாதம் மழைப்பதிவு வரலாற்றில் இடம் பெறும்.




இதுவரை பெய்த மழைக்கு, நகரின் பல பகுதிகளில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக, இந்தாண்டு அதி கன மழை பெய்து வருகிறது. வழக்கத்தை விட, கூடுதல் மழை பெய்ததால், சென்னை மாநகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக, இதுவரை இல்லாத அளவில், 1,582 தெருக்களில் மழை நீர் தேங்கியது.




இதில், பல தெருக்களில், மீண்டும் மீண்டும் மழை நீர் தேங்கியதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.பலர், வீடுகளை காலி செய்து, நிவாரண முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டுக்கு பின், சென்னையில் அதிகளவில் மழை பெய்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.



அதன்படி, இந்த மாதத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் நேற்று இரவு வரை, 100 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதை தவிர, புறநகர் பகுதிகளிலும் அதிகளவில் மழை பெய்துள்ளது.சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் ஐந்தாண்டுக்கு பின், மீண்டும் ஒரே மாதத்தில், 100 செ.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது. மீதமுள்ள இரண்டு நாட்களில், 10 செ.மீ., அளவு மழை பெய்தால், 1985ம் ஆண்டை விட அதிகளவில் மழை பெய்த ஆண்டாக 2021 இருக்கும்.



இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை, வழக்கத்தை விட கூடுதலான அளவில் பெய்ததுடன், புறநகர் பகுதிகளிலும், அதிகளவில் மழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில், மழை நீர் தேங்கியது.தண்ணீர் தேங்கிய பகுதிகளில், தொடர்ச்சியாக மோட்டார் பம்புகள் வாயிலாக நீர் அகற்றப்பட்டு உள்ளது.



பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டது. தற்போது, குறிப்பிட்ட அளவில் மழை நீர் வெளியேறி வருகிறது. நீர் வெளியேறாத இடங்களில், பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஆவடியில் அவதிஆவடியில் நேற்று ஒரே நாளில் 20 செ.மீ., மழை பதிவானது.



நேற்றைய கன மழையால், ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் அதிக தண்ணீர் வெளியேறியது. போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியது.பாதிப்புக்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.



ஆவடி, கோவில்பதாகை ஏரியின் தண்ணீர் போக்குகால்வாய் வழியாக கிருஷ்ணா கால்வாயை சென்றடையும். போக்குகால்வாய் ஆக்கிரமிப்பால் ஏரியின் உபரி நீர் குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி, பொதுமக்கள் அவதியடைந்தனர்.தற்போதைய மழைக்கு, ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், வசந்தம் நகர், சங்கரர் நகர், ஸ்ரீராம் நகர், பெரியார் நகர், அசோக் நிரஞ்சன் நகர், பருத்திப்பட்டு, பட்டாபிராம், சிந்து நகர். மேலும், தனலட்சுமி நகர், தென்றல் நகர் மற்றும் தண்டுரை ஏரி, பருத்திப்பட்டு ஏரி, கோவில்பதாகை ஏரி, விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.



இரு தினங்களாக பெய்து வரும் மழையில், அடையாறு ஆற்றுக்கு நீர் ஆதாரமாக விளங்கும், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, ஒரத்துார் நீர்த்தேக்கம், மணிமங்கலம், அமரம்பேடு, சோமங்கலம் உள்ளிட்ட 32 ஏரிகள் நிரம்பி, அவைகளில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறுகிறது. மூழ்கியது



முடிச்சூர்இதன் காரணமாக, நேற்று காலை, அடையாறு ஆற்றில் அதிகபட்ச வெள்ளம் கரை புரண்டு ஓடியது.தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் குறுக்கிடும் அடையாறு ஆற்றில் நேற்று அளவீடு செய்யப்பட்டதில், அடையாறு ஆற்றில், 12 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் சென்றது தெரியவந்தது.அதிகபட்ச வெள்ளம் ஓடியதால், சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழை நீர், அடையாறு ஆற்றுக்கு செல்ல முடியாமல், ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளை முகாமிட்டு நின்றது.



முடிச்சூர் லஷ்மி நகர், அமுதம் நகர், வரதராஜபுரம், பி.டி.சி., குடியிருப்பு, அஷ்டலஷ்மி, புவனேஸ்வரி நகர்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.அப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை, தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டு, அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர்.



தாம்பரம் கிருஷ்ணா நகர், சக்தி நகர், டி.டி.கே., நகர், பாரதி நகர், கண்ணன் அவென்யூ, குட்வில் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.தாம்பரம், செம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நேரில் ஆய்வு செய்தனர்.தாம்பரம் இரும்புலியூரில், வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த 59 பேரை, தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டனர்



இதற்கிடையே, சென்னையில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கவும், நீரை வெளியேற்றவும், ஈரோடு, தருமபுரி, திருநெல்வேலி, வேலுார் மாவட்டத்தில் இருந்து, 100 தீயணைப்பு வீரர்கள், 11 நீர் இறைக்கும் மோட்டார்கள், ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.



ஏற்கனவே, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், 50 நீர் இறைப்பு மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் என, 1,150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீச்சல் பயிற்சி பெற்ற, கமாண்டோ படையைச் சேர்ந்த 40 பேர், தாம்பரம், முடிச்சூர், தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், மழை நீர் வெளியேற்றம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



செம்பரம்பாக்கத்தில் 3,000 கன அடி!தொடர் கன மழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து, 6,000 கன அடியாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர் மட்டம், 21.21 அடியாகவும், மொத்த கொள்ளளவு, 2.9 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. இதையடுத்து, உபரி நீர் வெளியேற்றம், 2,000 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.தொடர் மழையால், நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் நிரம்பி, அதிக தண்ணீர் வருவதை கருத்தில் கொண்டு, உபரி நீர் வெளியேற்றம் உயர்த்தப்பட்டுள்ளது.



தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், உபரி நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏரியில் தொடர்ந்து 21வது நாளாக உபரி நீர் திறக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



நமது நிருபர் -

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X