வடமதுரை:புத்துார் பூசாரிபட்டியை சேர்ந்த ஆண்டிசாமியின் 17 வயது மகள் திடீரென மாயமானார். அதே பகுதியை சேர்ந்த சிறுவனே அழைத்து சென்றதாக ஆண்டிச்சாமி குடும்பத்தினர் எண்ணினர்.
சிறுவனின் பாட்டி பெரியக்காளிடம் தகராறு செய்து தாக்கினர். வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர். காயமடைந்த பெரியக்காள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமதுரை போலீசார் ஆண்டிச்சாமி 38, உறவினர் பிச்சன் 58, ஆகியோரை கைது செய்தனர். முத்துலட்சுமி, நாகம்மள் ஆகியோரை தேடி வருகின்றனர்.