5 நாளான சிசுவை விற்ற தாய் பணத்தை பறிகொடுத்ததால் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
03:17

சென்னை ; புழல் அருகே, பிறந்து ஐந்து நாட்களே ஆன சிசுவை விற்ற தாய், பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதால், போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, புழல் காவாங்கரையைச் சேர்ந்தவர் யாஷ்மின், 28. இவருக்கும், மோகன், 32, என்பவருக்கும், 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.



இவர்களுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். யாஷ்மின் மீண்டும் கர்ப்பமானார்.இவர், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்துமா தொல்லை காரணமாக, யாஷ்மின் கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில் அடிக்கடி சிகிச்சைக்கு சென்று வந்தார். அப்போது, எண்ணுார் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜெயகீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.குடும்ப வறுமை காரணமாக, குழந்தையை கலைக்க ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு ஜெயகீதா, குழந்தையை கலைக்க வேண்டாம். பிறந்தவுடன் அதிக விலைக்கு விற்று பணத்தை தந்துவிடுவதாக கூறினார்.அதன்படி, தன் அரவணைப்பில், யாஷ்மினுக்கு வேண்டிய உதவிகளை செய்துள்ளார். இம்மாதம் 21ல், ராயபுரத்தில் உள்ள, ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில் யாஷ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. உடன் இருந்து ஜெயகீதா உதவி செய்தார். கடந்த 25ம் தேதி யாஷ்மின் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.பேசியபடி, பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தையுடன், வேப்பேரி காவல் நிலையம் அருகே, புரசைவாக்கத்தில் உள்ள, பிரபல கடை அருகே வருமாறு ஜெயகீதா கூறியுள்ளார். அ



தன்படி, நேற்று மதியம், 12:30 மணியளவில், மூத்த மகள் மற்றும் கைக்குழந்தையுடன் யாஷ்மின் வந்தார்.அப்போது, தனக்கு ஏற்கனவே அறிமுகமான எண்ணுார் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த தனம், ஜெயகீதா ஆகியோர், ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் அங்கு வந்தார். பத்திரம் ஒன்றில் கையெழுத்து வாங்கிய பின், குழந்தையை பெற்று, ஜெயகீதா கவரில் பணத்தை கொடுத்துள்ளார்.



இந்த பணத்தை எண்ணி கூட பார்க்காமல், ஆட்டோவில், மூத்த மகளுடன் யாஷ்மின் வீட்டிற்கு சென்றார். ஆட்டோ, புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், ஓட்டுனரிடம் முகவரி கேட்பது போல நடித்து, யாஷ்மினிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து யாஷ்மின் வேப்பேரி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். அதில், 'தனம் மற்றும் அவருடன் வந்த இருவர் குழந்தையை ஏமாற்றி வாங்கி சென்றுவிட்டனர். குழந்தையை மீட்டுத்தர வேண்டும்' என, கூறியுள்ளார்.இதன் பின்னணியில், ஜெயகீதா, தனம் இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X