கடலுார் மாவட்டத்தில் மீண்டும் கன மழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
03:23

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்வதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திட்டக்குடி உட்பட மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.



நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 14.6 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. கொத்தவாச்சேரி 12, அண்ணாமலைநகர் 11.3, சிதம்பரம் 11.1, புவனகிரி 10, லால்பேட்டை 7.8, காட்டுமன்னார்கோவில், கடலுாரில் 7.6 செ.மீட்டர் பதிவானது.கடலுாரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. கோண்டூர், மஞ்சக்குப்பம், புதுப்பளையம், கே.என்பேட்டை, முதுநகர், செம்மண்டலம், பாதிரிக்குப்பம் உட்பட பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் மீண்டும் தேங்கியது.



இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். கே.என்.பேட்டை அருகே கெடிலம் ஆற்றின் கரை உடைந்து தண்ணீர் புகுந்ததால், போலீசார் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வராமல் தடுத்தனர். அப்பகுதியில் பாதித்த நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.கோவில்களில் தண்ணீர்கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில், பாடலீஸ்வரர் கோவில் அம்மன் சன்னதிக்குள் மழைநீர் புகுந்தது.



கடலுாரில் கனமழையின் போது வண்ணாரப்பாளையத்தில் நேற்று முன் தினம் இரவு சாலையோர மரம் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டது. கடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் நடுரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை, அறுந்து கிடந்த மின் கம்பிகளை சரி செய்தனர்.பெலாந்துறை அணைக்கட்டுகடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை - பெரியகொசப்பள்ளம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே 1876 ம் ஆண்டு 200.80 மீட்டர் நீளத்தில் பாசனத்திற்காக அணை கட்டப்பட்டது



இங்கிருந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசனம் பெறுகின்றன.பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக சின்னாறு, கல்லாறு, தொழுதுார் அணைக்கட்டு, ஆணைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளாற்றில் கலந்தது. இதனால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெலாந்துறை அணையின் மொத்த கொள்ளளவான 20 ஆயிரம் கன அடியில், 12 ஆயிரத்து 347 கன அடி நீர்வரத்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் அதே அளவு தண்ணீரை 17 ஷட்டர்கள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X