வெள்ளியங்கால் ஓடையில் 1,000 கன அடி நீர் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
03:33

காட்டுமன்னார்கோவில், : தொடர் மழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் 1,000 கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றுவதால் டெல்டா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுதும் மழை கொட்டித் தீர்த்தது. காட்டுமன்னார்கோவிலில் 76 மி.மீ., லால்பேட்டையில் 78 மி.மீ., மழை பதிவானது.



அரியலுார், தஞ்சை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் பொன்னேரி நீர்பிடிப்பில் நீர் மட்டம் 4.80 அடியாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனுடன் மழை நீர் சேர்த்து, வளவனேரி வழியாக வடவாற்றில் 2750 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.இதனால் வடவாறு ஜூரோ பாயிண்ட் மதகு வழியாக 450 கன அடி தண்ணீர் வெள்ளியங்கால் ஓடையில் திறக்கப்பட்டுள்ளது. மணவாய்க்கால் வழியாக 2,000 கன அடி தண்ணீர் சேர்ந்து வெள்ளியங்கால் ஓடையில் 4,000 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் குமராட்சி பகுதியில் நெல் பயிர்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.மேலும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 2300 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. ஏரி நீர் மட்டம் 45.40 அடியாக உள்ளது. தொடர் மழை பெய்வதால், பாதுகாப்பு கருதி நேற்று காலை முதல் திடீரென வீராணம் ஏரியிலிருந்து 1000 கன அடி லால்பேட்டை மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் திறக்கப்பட்டது. மேலும் சேத்தியாத்தோப்பு பூதங்குடி வி.என்.எஸ் மதகு வழியாக 1000 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது.



அணைக்கரை கீழணையில் நீர் மட்டம் 7.5 அடியாக உள்ளது. மேல் அணை முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நேரடியாக 45 ஆயிரம் கன அடியும், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 9,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மழை நீர் சேர்த்து கீழணைக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. இதனை அப்படியே கீழ் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வெளியேற்றப்படுகிறது. மேட்டூரில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்து வருகிறது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X