பா.ஜ., நிர்வாகி வீட்டில் வெடி விபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
03:43

புதுச்சேரி புதுச்சேரியில் பா.ஜ., அலுவலகம் உள்ள வீடு நேற்று காலை வெடித்து சிதறியதில், சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர். வீட்டில் வெடித்தது என்ன பொருள் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.



புதுச்சேரி, முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி கவுரி. பூ வியாபாரம் செய்கின்றனர். இவர்களது மகன் சுரேஷ், 28; பா.ஜ., உழவர்கரை மாவட்ட பொதுச் செயலாளர்.இவர் தனது வீட்டை புனரமைக்கும் பணியை இரண்டு மாதத்திற்கு முன்பு துவக்கினார். இதற்காக எழில் நகரில் வாடகை வீட்டிற்கு



பெற்றோருடன் குடியேறினார்.புனரமைக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டினை, 12 குடியிருப்புகளாக பிரித்துள்ளார். கீழ்தளத்தின் வாசல் வடக்கு பக்கம் உள்ள இடத்தை பா.ஜ., கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளார். கட்சி கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில், ஒரு வாரத்திற்கு முன், சுரேஷ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.



அலுவலகத்தை ஒட்டியுள்ள வீட்டின் கீழ்தளத்தில் சுரேஷின் தாத்தா சீனிவாசன், 64; பாட்டி ஜோதி, 56; சித்தி எழிலரசி, 37; அவரது மகள் ஸ்ரீமதி, 12; ஆகியோர் வசிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று காலை 6:50 மணிக்கு, எழிலரசி சமையல் அறைக்கு சென்றார். அங்கு, நேற்று முன்தினம் புதிதாக வாங்கிய ரெப்ரிஜிரேட்டரை 'சுவிட்ச் ஆன்' செய்தார்.அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது. சமையல் அறையின் சுவர் மற்றும்



பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததுடன், சமையல் அறைக்கு முன்புறம் இருந்த பா.ஜ., அலுவலக சுவர் இடிந்து விழுந்ததுமேலும், முன்புறம் இருந்த இரும்பு ஷெட்டர் பறந்து சென்று எதிர் வீட்டின் கூரை மீது விழுந்தது. வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் உருக்குலைந்து பாகங்கள் தனித்தனியாக சிதறின.கட்சி அலுவலக பக்க சுவரில் பொருத்தி இருந்த மின் இணைப்பு பெட்டிகள், மின் விசிறி, இரும்பு சேர் ஆகியவை நொறுங்கின. சமையல் அறையில் இருந்த மளிகை பொருள் டப்பாக்கள் துாக்கி வீசப்பட்டு, வீட்டிற்கு வெளியே சாலையில் சிதறிக் கிடந்தன.




வீட்டின் அறையில் படுத்திருந்த சிறுமி ஸ்ரீமதி, சமையல் அறையில் இருந்த எழிலரசி ஆகிய இருவரும் உடலில் தீப்பற்றி எரிந்தவாறு, வெளியே ஓடி வந்தனர். பயங்கர வெடி சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.வீட்டின் பின்புற சுவர் அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த பாட்டி ஜோதி மீது சுவர் இடிந்து விழுந்தது.தீக்காயமடைந்த எழிலரசி, ஸ்ரீமதி, சுவரின் கீழே சிக்கிய ஜோதி ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மூதாட்டிகள் மீட்புவெடி விபத்தில் கட்டடம் முழுதும் உருக்குலைந்தது. சுவர்கள் விரிசல் ஏற்பட்டு, தொங்கிக் கொண்டிருந்தன. இதனால் தீ அணைப்பு வீரர்கள், வீட்டிற்குள் செல்ல தயங்கினர்.பக்கத்து வீட்டின் மாடிக்கு ஏணி மூலம் முதல் தளத்திற்கு சென்று, அங்கிருந்த மூதாட்டி சாந்தி, பக்கத்து வீட்டு மாடியில் தங்கியிருந்த மூதாட்டி கிருஷ்ணவேணி ஆகியோரை மீட்டு அழைத்து வந்தனர்.தீவிர சிகிச்சைவிபத்தில் தீக்காயம் அடைந்த எழிலரசி, சுவர் விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த மூதாட்டி ஜோதி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



35 சதவீத தீக்காயத்துடன் ஸ்ரீமதி, தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறு காயமடைந்த நான்கு பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.விசாரணைசம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயை வரவழைத்து, வெடிபொருள் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்தனர்.சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்தனர்.போலீசாரின் பதில்போலீசார் கூறுகையில், 'சமையல் அறையில் வைத்திருந்த இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்றில் டியூப் பழுதாகி, காஸ் கசிந்துள்ளது. இரவு முழுதும் கசிந்த காஸ், சமையல் அறை முழுதும் பரவியுள்ளது. எழிலரசி ரெப்ரிஜிரேட்டர் சுவிட்ச் ஆன் செய்ததும், காஸ் தீப்பற்றி வெடித்துள்ளது' என்றனர்.தீயணைப்பு துறை தகவல்புதுச்சேரி கோட்ட தீ அணைப்பு அலுவலர் இளங்கோ கூறுகையில், 'விபத்து எதனால் நடந்தது என எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சமையல் அறையில் காஸ் சிலிண்டர் முழுமையாக உள்ளது. ரெப்ரிஜிரேட்டரால் விபத்து என கூறுகின்றனர். ஆனால், ரெப்ரிஜிரேட்டர் வெடித்தால் இந்த அளவு பாதிப்பு இருக்காது.



சிலிண்டர் காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டால், தீ ஏற்பட்ட புகை பக்க சுவரில் படிந்திருக்கும். ஆனால் பெண்ணின் உடலில் மட்டும் தீக்காயம் எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. கட்டடம் உருக்குலைந்து உள்ளதால், உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. வெடிபொருட்கள் ஏதேனும் வெடித்ததா என போலீசார் விசாரிப்பர். கட்டடம் பாதுகாப்பானது இல்லை என பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்' என்றார்.புரியாத புதிர்சமையல் அறையில் இருந்த இரண்டு காஸ் சிலிண்டர்களும் மூடிய நிலையில் இருந்தன.




புதிதாக வாங்கியதாக கூறப்படும் ரெப்ரிஜிரேட்டரின் கம்ப்ரஷர் எவ்வித பாதிப்பும் இன்றி இருந்தது. வெடிகுண்டு வெடித்தால் ரசாயன கலவை சுவரில் படிந்திருக்கும்.நாட்டு வெடிகுண்டு, பட்டாசு வெடித்தாலும் குண்டு தயாரிக்க பயன்படும் திரி, ஆணி, இரும்பு துகள், காகிதங்கள் சிதறிக் கிடக்கும். ஆனால், விபத்து நடந்த வீட்டிற்குள் எந்த தடயமும் இல்லை. அதனால், விபத்திற்கான காரணம் உறுதியாக தெரியாமல் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X