விருத்தாசலம், : விருத்தாசலத்தில் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருத்தாசலம் மணலுார் புதிய காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 50; கூலி தொழிலாளி, இவரது மனைவி காமாட்சி, 45; இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் கூரை வீட்டில் வசிக்கின்றனர்.
சில தினங்களாக பெய்யும் மழையால் நேற்று காலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் காமாட்சி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.