மாவட்ட ஆறுகளில் தொடரும் நீர்வரத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
04:43

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நீர்நிலைகள் நிரம்பியதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

\


கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் தென்பெண்ணையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 1.50 லட்சம் கன அடி தண்ணீர் ஓடியது. கெடிலம் ஆற்றிலும் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடியது. இதனால், கடலுாரில் கரையோர கிராமங்கள் மற்றும் நகர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.மழை ஓரளவு குறைந்ததால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.



நேற்றைய நிலவரப்படி தென்பெண்ணை, கெடிலத்தில் தலா 15 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் சென்ற நிலையில் நேற்று 55 ஆயிரம் கன அடி, புவனகிரி வெள்ளாற்றில் 42 ஆயிரம் கன அடி, மேல் பரவனாற்றில் 1933 கன அடி, கீழ் பரவனாற்றில் 6,778 கன அடி தண்ணீர் ஓடியது.தற்போது கடலுார், விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கெடிலம், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றில் உடைப்பு ஏற்பட்ட கஸ்டம்ஸ் சாலையொட்டி, பொதுப்பணித்துறை சார்பில் சவுக்கு கட்டைகள் கட்டி, மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிக கரை அமைக்கும் பணி நடக்கிறது. மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. கடலுார் வரை பல இடங்களில் இப்பணி நடக்கிறது



மாவட்டம் முழுவதும் ஆறுகளில் தண்ணீர் வருவதால் ஆற்றில் இறங்காமல் எச்சரிக்கையாக இருக்குமாறு கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெண்ணாடம்சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, பெண்ணாடம் - செம்பேரி இடையே வெள்ளாற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வடபுறம் உள்ள கரை சேதமடைந்தது. சேதமடைந்த வெள்ளாற்றங்கரை பகுதிகளை பெலாந்துறை அணைக்கட்டு உதவி பொறியாளர் பாஸ்கரன் தலைமையில், மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து, கரைகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202111:56:19 IST Report Abuse
அப்புசாமி படத்தப் பாருங்க. அதைப் பார்க்க ஆறு மாதிரியாடா இருக்கு? இருந்த மணலையெல்லாம் சுரண்டி எடுத்து வித்துட்டு, இப்போ கட்டாந்தரையாயி, முள்ளு மரம் வளர்ந்து காடு மாதிரி கெடக்கேடா.. இதுல தண்ணீர் கீழே உறிவதற்கு எதுவுமே இல்லியே... இப்பிடி வெள்ளம் வந்து கொண்டுபோனாத்தான் நாட்டுக்கு விடிமோட்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X