சங்கராபுரம், : மாநில அளவில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று துபாய் செல்ல தேர்வான பொய்க்குனம் பள்ளி மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் இணைய வழியில் நடந்த வினாடி வினா போட்டியில் மாநில அளவில் 85 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 85 பேரும் துபாய் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.இதில், சங்கராபுரம் அடுத்த பொய்க்குனம் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கார்மேகம், கற்பகம் ஆகியோர் தேர்வாகினர்.துபாய் சுற்றுலா செல்ல தேர்வான கார்மேகம், கற்பகம் ஆகியோரை கலெக்டர் ஸ்ரீதர் பாராட்டி பரிசு வழங்கினார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவராமன், கார்த்திகா, ஆரோக்கியசாமி, தலைமை ஆசிரியை தாட்சாயணி உடனிருந்தனர்.