அந்தியூர்: பர்கூர் வனப்பகுதி, கொங்காடை மற்றும் தாமரைக் கரையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு, தமிழ்நாடு இளம் குழந்தை பராமரிப்பு கூட்டமைப்பு, தழிய் சுடர் தொண்டு நிறுவனம் சார்பில், சீர்வரிசை திருவிழா நடந்தது. இதில் மையங்களுக்கு தேவையான குழந்தைகள் அமரும் சிறு இருக்கைகள், விளையாட்டு பொருட்கள், கல்வி உபகரணங்கள் சீர் வரிசையாக கொண்டு சென்று வழங்கப்பட்டது.