ஈரோடு: ஈரோட்டில், டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், கூலி தொழிலாளி பலியானார். ஈரோடு, பெரியசேமூர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 40, கூலி தொழிலாளி. பல்சர் பைக்கில் எல்லப்பாளையம் சாலையில் நேற்று காலை சென்றார். அதே சாலையில் இவருக்கு எதிர் திசையில், எல்லப்பாளையம் சக்தி நகரை சோந்த சக்தி, 25, டூவீலரில் வந்தார். சோலார் அருகே இரண்டு பைக்குகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரகாஷ் தலையில் பலத்த காயமடைந்தார். சக்தி லேசான காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரகாஷ் இறந்து விட்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.