கோபி: கோபி அருகே பழைய வள்ளியாம்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் ரஜ்ஜித்குமார், 21, தருண், 21; இருவரும் அப்பாச்சி பைக்கில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியதில், பலத்த காயமடைந்தனர். இருவரும் கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரஜ்ஜித்குமார் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.