இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஈரோடு தாளவாடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து, 7,000 பெட்டிகள் தக்காளி தினமும் வரத்தாகும். தொடர் மழையால், 2,000 பெட்டியாக குறைந்ததால் விலை எகிறியது.மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, மூன்று நாட்களாக தக்காளி வரத்தாகிறது.
அதேபோல் தாளவாடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் பகுதிகளில் இருந்து நேற்று வரத்தானது. இதில், 25 கிலோ பெட்டி, 900 ரூபாய் முதல், 1,000 ரூபாய், 14 கிலோ பெட்டி, 400 ரூபாய் முதல், 500 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்த விலையில் கிலோ, 30 முதல், 40 ரூபாய்க்குள் விற்பனையானது. கடைகளில், 50 முதல், 60 ரூபாய் வரை விற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.