அன்னுார் : அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், பொகலுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில், பள்ளேபாளையம், இழுப்பநத்தம் ஆகிய ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கரில், தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு ஆயத்த பணிகள் செய்து வருகிறது.இதை எதிர்த்து, விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று அன்னுாரில், திருப்பூர் வடக்கு மாவட்ட காங். தலைவர் கோபியிடம், தொழில்பேட்டை எதிர்ப்பு போராட்ட குழு விவசாயிகள் மனு அளித்தனர். மனுவை பெற்ற அவர், ''எம்.பி., ராகுலிடம் நேரடியாக தெரிவித்து தொழில்பேட்டைக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.