பள்ளி கல்வித்துறையில் மண்டல ஆய்வு கூட்டம்: அமைச்சர் தலைமையில் 2 நாள் நடத்த ஏற்பாடு | சேலம் செய்திகள் | Dinamalar
பள்ளி கல்வித்துறையில் மண்டல ஆய்வு கூட்டம்: அமைச்சர் தலைமையில் 2 நாள் நடத்த ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
20:50

சேலம்: பள்ளி கல்வித்துறை மேம்பாட்டுக்கு, அமைச்சர் பங்கேற்கும் மண்டல ஆய்வு கூட்டம் நடத்துவதற்கான அட்டவணை, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில் கற்றல் திறன் மேம்பாடு, மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை முறையாக சேர்வதையும், துறையை மேம்படுத்தவும், அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டங்களை ஏழு மண்டலமாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும், இரு நாள் கூட்டம் நடத்துவதற்கான கால அட்டவணை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், டிச., 15, 16ல் தஞ்சாவூர்; 22, 23ல் விழுப்புரம்; ஜன., 5, 6ல் திருநெல்வேலி; 19, 20ல் மதுரை; பிப்., 9, 10ல் சேலம்; 16, 17ல் காஞ்சிபுரம்; 23, 24ல் கோவை மண்டலங்களில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. பிப்., 9, 10ல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய, சேலம் மண்டல ஆய்வு கூட்டம் நடத்தப்படும். முதல் நாளில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், இரண்டாம் நாளில் கள அலுவலர்களுடன் கூட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X