மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கனஅடியாக சரிவு | சேலம் செய்திகள் | Dinamalar
மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கனஅடியாக சரிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
20:50

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 20 ஆயிரத்து, 500 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் நேற்று வினாடிக்கு, 13 ஆயிரத்து, 700 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. எனினும், தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 22 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 20 ஆயிரத்து, 500 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக, 17 ஆயிரம் கனஅடி, 16 கண் மதகில், 3,000 கனஅடி என, 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X