தனி தீவானது அய்யப்பன்தாங்கல்; 15 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரால் பாதி்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
22:46


அய்யப்பன்தாங்கல் : காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி அமைந்து உள்ளது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன.



இங்கு, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி இல்லாததால், ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி முழுதும் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.இதில், 2015 ல் பெய்த மழையில், ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும், 4 அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்தது. இவ்வாண்டிலும், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் பெய்து வரும் மழையால், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் வழக்கம் போல மழை நீர் தேங்கியுள்ளது.



14 வார்டுகள் பாதிப்புஇங்குள்ள 15 வார்டு களில், 14 வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி வழியாக செல்லும், போரூர் ஏரியின் நீர் வரத்து கால்வாயான தந்தி கால்வாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து உள்ளது.குறிப்பாக சிவராமகிருஷ்ண நகர், ஈ.வி.பி., பிரபு அவென்யூ, மதுரம் நகர், தனலட்சுமி நகர், சாய் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சுப்பிரமணிய நகர், வி.ஜி.என்., நகர், நடேசன் நகர், வேணுகோபால் நகர், காமாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக்கூட, வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.



பாதிக்கப்பட்டோருக்கு தங்குவதற்கான ஏற்பாடோ, உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களோ வழங்கப்படவில்லை.படகான 'தெர்மாகோல்'இப்பகுதிகளில், 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களே 'தெர்மாகோல்' மிதவைகளை தயாரித்து, அதன் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.



மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மின் மோட்டார்களை இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுவரை, இப்பகுதியில் எந்த அதிகாரிகளும் வந்து நேரில் பார்வையிடவில்லை எனவும், இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X