வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
22:51


கனமழையால், சென்னை புறநகரில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள ஊராட்சிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.சென்னை புறநகரான தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இம்மாதம் துவக்கம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது.



கடந்த ஒரு வாரமாக, மீண்டும் மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.வெள்ளப் பெருக்குகடந்த 26ம் தேதி முதல் பெய்து வரும் மழையால், அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி, பெருங்களத்துார், குட்வில், மூவேந்தர், எஸ்.ஆர்.எஸ்., பாலாஜி, எப்.சி.ஐ., சசிவரதன் நகர்கள், ராகவேந்திரா கார்டன், காசா கிராண்ட் பகுதிகளில், 10 நாட்களாக வெள்ளம் தேங்கி உள்ளது.குட்வில் நகர் பின்புறம், அடையாறு ஆறு கால்வாயில் அமைக்கப்பட்ட மதகு துவங்கி, பாப்பான் கால்வாய் வரை, முறையாக மழை நீர் வெளியேற, கால்வாய் அமைக்கப்படாததும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் அடையாறு ஆறு கால்வாய் பயணிக்கும் திசையில் கரையை பலப்படுத்தாததுமே, இதற்கு காரணம் என, பகுதி மக்கள் கூறுகின்றனர்.




மாநகராட்சியை ஒட்டிய, முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட, எஸ்.கே., அவென்யூ, துரைசாமி, செந்தில், அமுதம், நேமினாதன், திருமலை நகர்கள், மதனபுரம், ஞானபண்டித நகர் ஆகியவற்றில், ஒரு வாரத்திற்கும் மேல், மழை நீர் தேங்கி உள்ளது.'கட் அண்ட் கவர்' வீடுகள் முழுதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால்,




இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், உணவு, பால் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், படகில் சென்று வழங்கப்படுகின்றன.இந்த ஊராட்சி முழுதும் மழை நீர் வடிகால்களும், வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் அணுகுசாலையோரம், அடையாறு ஆறு நோக்கி செல்லும் கால்வாய் மீது, 'கட் அண்ட் கவர்' கால்வாயும் அமைக்கப்படாததே, ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்பட காரணமாகி உள்ளது.இதேபோல், அகரம் தென் ஊராட்சியில், சாய் பாலாஜி நகர் மற்றும் அதை சுற்றிய ஆறு தெருக்களில், மூன்று நாட்களாக வெள்ளம் சூழ்ந்துள்ளது;



ஊராட்சி நிர்வாகம் சார்பில், உணவு உட்பட எந்த உதவியும் கிடைக்காமல், பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றம்வெங்கம்பாக்கம் சாலை துவங்கி, சாய் பாலாஜி நகர் பின்புறத்தை கடந்து, அகரம் தென் பெரிய ஏரிக்கு செல்லும் விதமாக, 45 அடி அகலம் உடைய ஓடை துார்வாரப்படாமல் உள்ளதே, இப்பகுதியில் ஊருக்குள் வெள்ளம் வர, பகுதி மக்கள் கூறுகின்றனர்.அதேநேரம், செம்பாக்கத்தில், தாங்கல் ஏரியில் இருந்து வரும் மழை நீர், நன்மங்கலம் ஏரிக்கு செல்ல, மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.



- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X