வேளச்சேரி உபரி நீர் கால்வாய் மூழ்கியது ராம் நகர், விஜய நகர் மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
22:56

வேளச்சேரி : வேளச்சேரி உபரி நீர் கால்வாய் மூழ்கியதால், ராம் நகர், விஜய நகர் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.சென்னையில் கனமழையால், பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.



குறிப்பாக, வேளச்சேரி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், 15 அடி அகல கால்வாய் வழியாக, சதுப்பு நிலத்தை அடைகிறது.ஆலந்துார், ஆதம்பாக்கம், மடுவாங்கரையில் வடியும் மழை நீர், ஏரியை அடைந்து, அங்கிருந்து கால்வாய் வழியாக செல்கிறது. வழக்கத்தை விட, அதிகமான வெள்ளம், கால்வாயை மூழ்கடித்து சென்றது.



ராம் நகர், விஜய நகரில் வடியும் மழை நீர், கால்வாயில் சேரும் வகையில், வடிகால் கட்டமைப்பு உள்ளது. கால்வாய் மூழ்கி சென்றதால், வடிகாலில் நீரோட்டம் இல்லாமல் அப்படியே நின்றது.இதனால், ராம் நகர், விஜய நகர், ஏ.ஜி.எஸ்., காலனி உள்ளிட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கியது. அங்குள்ள மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் வீட்டிலே முடங்கினர்.கல்கி நகரில், மோட்டார் வைத்ததால் அங்கு பாதிப்பு குறைவாக இருந்தது.



வேளச்சேரி - தரமணி சாலையில் அமைத்துள்ள மூடு கால்வாயில் செல்ல வேண்டிய வெள்ளம், பின்னோக்கிபாய்வதும், ராம் நகர், விஜய நகர் பாதிப்புக்கு ஒரு காரணம். வேளச்சேரி பகுதியில், நீரோட்டம் பார்த்து வடிகால் கால்வாய் கட்டியிருந்தால், பாதிப்பு குறைந்திருக்கும்.இதற்கு, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறைகள் இணைந்து செயல்படுவது அவசியம் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
29-நவ-202112:25:44 IST Report Abuse
jayvee 'விளைச்சல் ஏரி' வேளச்சேரியாக மாறியதின் கொடுமை இது
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
29-நவ-202108:37:53 IST Report Abuse
 Muruga Vel கக்கன் பிரிட்ஜ் தண்ணீர் வரும் பகுதி முழுவதும் ஆக்கிரமித்து வீடுகள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X