பரமக்குடியில் வெள்ளத்தில் உடைந்த தரைப்பாலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
23:12

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் 9 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் உடைந்தது.

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பார்த்திபனுார் மதகை அடைந்தது.தொடர்ந்து மதகில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறக்கப்பட்டது.பரமக்குடி ஆற்றுப் பாலம் சேதமடைந்த நிலையில் அருகில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புதிய ஆற்றுப் பாலம் அமைக்க தற்காலிக தரைப்பாலம் கட்டப்பட்டது.எமனேஸ்வரம், வைகை நகர், புதுநகர், மஞ்சள் பட்டினம் உள்ளிட்ட மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

அவ்வப்போது வந்த ஆற்றுநீரில் பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. நேற்று பாலத்தில் 20 அடி அகலம் வரை உடைந்தது.இதே போல் பரமக்குடி -எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் வைகை தரை பாலம் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையில் 2 புறங்களிலும் உள்ள பக்கவாட்டு சுவர்கள் இடிந்து உள்ளன.தொடர்ந்து மழை நேரங்களில் பாலத்தின் மீது தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.

தற்போது வெள்ளநீர் பாலத்தை மூழ்கடித்துச் சென்ற நிலையில், ஒட்டுமொத்தமாக சேதம் அடையும் முன்பு, சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலையில் பாலம் உடையும் பட்சம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் 8- வார்டு மக்கள் பாதிக்கும் நிலை ஏற்படும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X