மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு கலைகள் உதவும்; நர்த்தகி நடராஜ் பேச்சு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
23:13

ராமநாதபுரம் : மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும்,ஒழுக்கத்துடன் வாழ்வதற்கும் கலைகள் தான் உதவும், என்று சிறந்த பரத நாட்டிய கலைஞரும், தமிழக அரசு மாநில திட்டக்குழு உறுப்பினருமான டாக்டர் நர்த்தகி நடராஜ் பேசினார்.



ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஜவஹர் சிறுவர் மன்றத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய டாக்டர் நர்த்தகி வந்தார். அவருக்கு இசைப்பள்ளி மற்றும் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். மாணவர்களிடம் அவர் பேசுகையில், நீங்கள் கற்கும் கலைகள் உங்களை வாழ வைக்கும். நிச்சயம் கைவிடாது. கலைகள் கற்பவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்வார்கள்.

நீங்கள் கலையில் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டால் மிக உயர்ந்த இடத்தை அடைய முடியும். பரதநாட்டியம் போன்ற அற்புத நடனக்கலைகள்,இசைகளை கற்கும் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. பல அற்புத கலைகள் ஆயிரம் உள்ளன. எனவே, மாணவர்கள் கல்வியோடு கலைகளை கற்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்றார்.

சாமுத்ரிகா அகாடமிநிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி தமிழரசி பிரியா, பரத நாட்டிய குருசக்தி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை மீனலோச்சனி வரவேற்றார். மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோக சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X