ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை கொட்டித் தீர்த்தது.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்கிறது.
குறிப்பாக பாம்பன், மண்டபம் கடற்கரை பகுதிகள் வெள்ளக்காடானது.மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக பாம்பனில் 114.20 மி.மீ., மண்டபத்தில் 113.20 மி.மீ., பதிவானது. அதற்கு அடுத்தபடியாக தங்கச்சிமடத்தில் 88.70 மி.மீ.,ராமேஸ்வரம் 38.40, ராமநாதபுரம் 23, தொண்டி 48, வட்டாணம் 31.90, பள்ளமோர்குளம் 23, திருவாடானை 22.60, தீர்த்தாண்டதானம் 32.70, ஆர்.எஸ்.மங்கலம் 28.20, பரமக்குடி 12.20, முதுகுளத்துார் 11, கமுதி 5.80, கடலாடி 6 மி.மீ., பதிவானது.