சிறப்பு தணிக்கை அறிக்கையில் 'பகீர்' புகார் 'வரப்பை காணோம்' :கால்நடைகளை காரணம் காட்டி 'காமெடி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
23:14

அன்னுார்:கனுவக்கரையில், 100 நாள் வேலை திட்ட பணிகளின்போது அமைக்கப்பட்ட வரப்பு அளவில், 3,248 கன அடியை காணவில்லை என்பதுடன், வெட்டியாக இருந்தவர்களுக்கு கூலி வழங்கி தில்லு, முல்லு வேலைகள் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அன்னுார் அருகே கனுவக்கரை ஊராட்சியில், 2019--20ம் நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 63 லட்சத்து, 22 ஆயிரத்து, 530 ரூபாய் மதிப்பில், வரப்பு, பண்ணைக் குட்டை, மரம் நடுதல், தடுப்பணை அமைத்தல் என, 72 பணிகள் செய்யப்பட்டன. இப்பணிகள் சமூக தணிக்கை செய்யப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் கனுவக்கரையில் நடந்தது.அப்போது, வட்டார வள அலுவலர் சந்திரசேகர் தணிக்கை அறிக்கையில், 13 குறைபாடுகளை வாசித்தார். அதில், 36 இடங்களில் வரப்பு அமைக்கப்பட்டதில், 16 ஆயிரத்து, 828 கன அடிக்கு வரப்பு இருக்க வேண்டும். அளவீடு செய்ததில், 13 ஆயிரத்து, 580 கன அடி வரப்பு மட்டுமே இருந்தது; 3,248 கன அடி குறைவாக இருந்தது.இரு இடங்களில் கூடுதலாக, 2,730 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பணி செய்யாதவருக்கு, 1,260 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் பணி, மதிப்பீடு, பணி ஆட்கள் உள்ளிட்ட விபரம் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை.உருவாக்கப்பட்ட சொத்துக்களின் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை புகைப்படங்களுடன் பதிவேடு முழுமையாக பராமரிக்கப்படவில்லை. சில பணிகளுக்கு முடிவறிக்கை சமர்ப்பிக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கையெழுத்து சில பணிகளுக்கு பெறவில்லை என, அடுக்கடுக்காக குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டன.ஊராட்சி தலைவர் காந்திமதி, செயலர் பழனிசாமி ஆகியோர்,'வரப்பு அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. மழை, கால்நடைகள் மேய்ச்சல் காரணமாக வரப்பின் அளவு குறைந்துள்ளது. சொத்து பதிவேடுகளில் புகைப்படம் ஒட்டி சமர்ப்பிக்கப்படும்.
கூடுதலாக சம்பளம் பெற்றவர்களிடம் தொகை திரும்ப பெறப்படும்' என்றனர்.கூட்டத்தில் சிலர், இரு வாரமாக சம்பளம் வழங்கவில்லை. 100 நாள் வேலை என்பதை, 150 ஆக உயர்த்த வேண்டும். ஆடு, மாடு கொட்டகை அமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.ஊராட்சி துணைத்தலைவர் சிவா, ஒன்றிய கவுன்சிலர் சின்னான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா ஆகியோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X