ராமநாதபுரம் : ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று(நவ.29) காலை 11:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத்ராய் கூறியிருப்பது:செப்.2021 தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்று முதலாம் ஆண்டும்மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற நிறுவனங்களில் இன்று காலை 11:00 மணிக்கு பார்க்கலாம். தனித்தேர்வர்களை பொறுத்தவரை விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் முடிவுகளை அறியலாம்.
மேலும் விடைத்தாள் ஒளிநகல் பெற, மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்து குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் டிச.1 முதல் 4 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும், என்றார்.