அவசர கதியில் சிவன் கோவில் இடிப்பு; ஸ்ரீபெரும்புதூரில் பக்தர்கள் கொதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
23:15

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், தனியார் அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்பட்ட சிவன் கோவிலை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அவசர கதியில் அகற்றிய வருவாய் துறையினர் நடவடிக்கைக்கு, பக்தர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் பூஜை செய்து, இப்பிச்னையை சட்ட ரீதியில் சந்திக்க பக்தர்கள் சபதம் ஏற்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, கிளாய் கிராமத்தில், ஸ்ரீபெரும்புதுார் ஏரி கலங்கல் அருகே தபோவனம் அறக்கட்டளை சார்பில், சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது.பின், பக்தர்களின் நன்கொடையால் இந்தக் கோவில் விஸ்தரிக்கப்பட்டு, அம்மன் சன்னதி, நாயன்மார்கள் சன்னதி, அன்னதானக் கூடம் ஆகியவை கட்டப்பட்டன.ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, கனக கருவறையில் கனக காளீஸ்வரர் அருள்பாளித்தார். இந்த கோவிலில், பல்வேறு முக்கிய பூஜைகள் நடத்தப்பட்டதுடன், சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிறிய கோவில்களின் பராமரிப்புக்கும், அறக்கட்டளை சார்பில் உதவி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த கோவிலில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், பெரிய ஏரி கலங்கல் பகுதியில், ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாகவும், வருவாய் துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற குழுவினர், பொக்லைன் இந்திரம் மூலம் கோவில் மற்றும் அதை ஒட்டிய அன்னதானக் கூடத்தை இடித்து தள்ளினர். அங்கிருந்த தனியார் கேண்டீனும் இடிக்கப்பட்டது.எனினும், கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பது குறித்தும், அதை அகற்றுவது குறித்தும், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் துறை சார்பில் எவ்வித முன்னறிவிப்போ அல்லது நோட்டீசோ வழங்கப்படவில்லை என, கோவில் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். கலெக்டரிடம் சென்று முறையிட்டு திரும்பும் நேரத்திற்குள், அவசரகதியில் கோவிலை இடித்து தள்ளியதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துஉள்ளனர். பாலாலாயம் செய்து சிலைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறியும், மாவட்ட வருவாய் அலுவலர் அவகாசம் வழங்காமல் காவல் துறை மூலம் பக்தர்களை விரட்டி அடித்து, கோவிலை இடித்து தரைமட்டமாக்கியதாக பத்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இந்நிலையில், ஹிந்து அமைப்பினர் சிலர், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று முன்தினம், சிவன் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மீது, காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் கூறி, கலைந்து சென்றனர். பின், கோவில் இடிக்கப்பட்ட இடத்தில், பகல் 1:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் ஒன்று திரண்டு பூஜை செய்தனர்.அப்போது, 'மதமாற்று சக்திகளுக்கு அடி பணிய மாட்டோம், வழிபாட்டு தலத்தை இடிக்க பின்னணியாக இருந்த அரசியல் கட்சிக்கு எந்த காலத்திலும் வாக்களிக்க மாட்டோம்' என சபதம் ஏற்றனர். மதமாற்ற கும்பலுக்கு ஆதரவாக, அரசு அதிகாரிகள் சிலர் செயல்பட்டுள்ளதாகவும், கோவில் பக்தர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர். இந்த கோவிலின் கருவறை, 15 சென்ட் பட்டா நிலத்தில் கட்டப்பட்டது.இதை ஒட்டி இருந்த அன்னதான கூடம், மதில் சுவரை மட்டும் இடிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் வாக்குறுதி அளித்தார். அது குறித்து நோட்டீஸ் ஏதும் அளிக்கப்படவில்லை. எனவே, நாங்கள் கலெக்டரை சந்தித்து முறையிட சென்றோம். திரும்பி வருவதற்குள், கோவில் முழுவதையும் இடித்து தள்ளிவிட்டனர்.பாலாலயம் செய்து, ஆராதனை மூர்த்திகளை வெளியேற்றக்கூட அவகாசம் அளிக்கவில்லை. 2 கோடி ரூபாய் செலவில் பக்தர்களால் கட்டப்பட்ட கோவிலை இடிப்பதற்காக, அங்கிருந்த பக்தர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். எஸ். கிருஷ்ணமூர்த்தி, 48,தபோவனம் அறக்கட்டளை நிறுவனர், ஸ்ரீபெரும்புதுார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
29-நவ-202121:24:42 IST Report Abuse
Visu பன்னீர்செல்வம் பின்புலம் ஆராய படவேண்டியது அவசியம்
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
29-நவ-202114:37:05 IST Report Abuse
Bala இந்த படு பாதக செயலை செய்வதற்கு காரணமாக இருந்தவர்கள் மற்றும் இதற்காக சதி செய்தவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவது நிச்சயம். பாவம் அவர்களுடைய தலைமுறையையே இந்த செயல் கடுமையாக பாதிக்கும். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு அவர்களுடைய குடும்பத்தினரும் சேர்ந்து தண்டனையை பல பிறவிகளுக்கு அனுபவிக்க வேண்டி வரும்
Rate this:
Cancel
Brahamanapalle murthy - Bangalore,இந்தியா
29-நவ-202114:17:15 IST Report Abuse
Brahamanapalle murthy What will the Courts say now that without following due process how the officials can demolish such temples. If these are unauthorised, why did the officials allow that temple to be built in the first place? From the report there is suspicion that succumbing to other religion pressure the officials have acted in haste. The Court should on suomotto take up with issue and notice to be given Government for the failure on the part of officials not following legal process
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X