ராமநாதபுரம் : எட்டிவயல் கிராமத்தில் திருப்புல்லாணி வட்டார விவசாயிகள் 40 பேருக்கு அங்கக வேளாண்மை குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மை முறைகள், நிலங்களை இயற்கை முறையில் எவ்வாறு சாகுபடிக்கு தயார் செய்வது என்பது குறித்து திருப்புல்லாணி உதவி இயக்குனர் அமலர்லால் விளக்கினார். இயற்கை விவசாயி தரணி முருகேசன் பேசுகையில், விவசாயிகள் அங்கக வேளாண்மையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், நாட்டு மாடு வளர்த்தல், பஞ்சகாவ்யம் தயாரித்தல், தேமோர் கரைசல் தயாரித்தல், மூலிகை பூச்சி விரட்டிகள்தயாரித்தல், கனஜீவாமிர்தம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்.