தங்க பத்திரம் விற்பனை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
தங்க பத்திரம் விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
23:20

ராமநாதபுரம் : இன்று (நவ.29) முதல் டிச.3 வரை தலைமை மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களில் தங்கபத்திரம் விற்பனை செய்யப்படுவதாக அஞ்சலக ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது: மத்திய அரசு ரிசர்வ் வங்கிமூலம் தங்கபத்திரம்விற்பனை திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் அஞ்சல்கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் இன்று (நவ.29) முதல் டிச.3 வரை ஐந்து நாட்கள் தங்கபத்திரம் விற்பனை நடக்கிறது. ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ தங்க பத்திரம் வாங்கலாம்.

ஒரு கிராம் விலை ரூ.4791 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதலீடு செய்த தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி எட்டு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.எட்டு ஆண்டு கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத்தொகை வழங்கப்படும். தங்கபத்திரம் வாங்குவதற்கு ஆதார் கார்டு, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X