அன்னுார்:அன்னுாரில் குளம் போல் தேங்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகிவருவது நோய் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்னுார்-அவிநாசி ரோட்டில் உள்ள, ராசா கோவில் வீதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை வடிகாலில் மண் நிரப்பப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், வீதியின் நடுவே கழிவுநீர் வழிந்து ஓடி, குளம் போல் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி மற்றும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. தற்போது, டெங்கு உள்ளிட்ட நோய் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இப்பிரச்னைக்கு, பேரூராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதியினரின் கோரிக்கை.