செய்திகள் சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
00:06

ஆபத்து அறியாமல் அத்துமீறல்


பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், சாலை விதிகளுக்கு முரணாக வாகனங்களில் பயணம் மேற்கொண்டு, விபத்து அபாயத்துக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், கனரக வாகனங்களில் ஆபத்தை அறியாமல் பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால், உயிரிழப்பு வரையிலான விபரீதங்கள் ஏற்படும் என்பதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வாயிலாக உணர வைக்க வேண்டும். தனியார் மட்டுமின்றி, அரசு சார்பில் நடக்கும் நெடுஞ்சாலை அமைப்பு, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும், இது போன்று விதிமீறல் பயணங்களில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரரை எச்சரிக்க வேண்டியது அவசியம்.


ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவுகிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி சார்பில், எம்.எல்.ஏ., உதயநிதியின், 44வது பிறந்த நாள் விழா கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.கிணத்துக்கடவு ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிங்கராம்பாளையம் பிரிவில் செயல்படும் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் முகமதுயாசின், இளைஞர்அணி அமைப்பாளர் பாலச்சந்திரன் நகர செயலாளர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


வருமுன் காப்போம் முகாம்


ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட, காட்டம்பட்டியில், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், காட்டம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 370 பேர் பங்கேற்றனர்.பொது மருத்துவம், பல் சிகிச்சை, எலும்பு தொடர்பான சிகிச்சை, கண், காது, மூக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. கர்ப்பிணிகள், பெண்கள், முதியோருக்கு மருத்துவ பெட்டகங்கள் வினியோகிக்கப்பட்டன. முன்னதாக, தெற்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா மற்றும் நல்லட்டிபாளையம், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.


முகாமில் 19 மனுக்களுக்கு தீர்வுகிணத்துக்கடவு ஒன்றியம், காட்டம்பட்டி மற்றும் சிறுகளந்தை கிராமங்களுக்கான பட்டா, சிட்டா திருத்த சிறப்பு முகாம் காட்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சசிரேகா தலைமை வகித்தார். காட்டம்பட்டி வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவு நல அலுவலர் அம்சவேணி பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து, 95 மனுக்கள் பெற்றார். இவற்றில், 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. முகாமில், வட்டார துணை தாசில்தார் ராமராஜன் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.கல்லுாரி மாணவர்கள் அணிவகுப்புவால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர்கள் படை துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய மாணவர் படை தின விழாவையொட்டி, மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.கல்லுாரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியை, பேராசிரியர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். முன்னதாக தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டிணன்ட் முரளிராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லைஉடுமலை நகராட்சிக்குட்பட்ட, யு.கே.சி., நகர், நகராட்சி துவக்கப்பள்ளியில், 25க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர்.வகுப்பறை, கழிப்பிடம் என கட்டடங்கள் மட்டுமல்லாது, 30 சென்ட் பரப்பளவில், பள்ளி வளாகம் அமைந்துள்ளது.இந்நிலையில், தொடர் மழையால், வளாகத்திலுள்ள காலியிடத்திலும், வகுப்பறை கட்டடத்தை சுற்றியும் மழை நீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கழிப்பிடத்துக்கு செல்வதற்கு கூட பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகிறது. மழை நீரில், நன்னீர் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் அப்பகுதியில் உள்ளது.சேறும், சகதியுமாக காணப்படும் பள்ளி வளாகத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, நகராட்சி நிர்வாகம் அலட்சியத்தை கைவிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.பாலத்தில் பராமரிப்பு தேவை


கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம், 1984ம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது; 2015-ல் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டன.தற்போது பல மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களைச்சேர்ந்த வாகனங்கள் பாலத்தை கடந்து செல்கின்றன. நிமிடத்துக்கு, 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் அளவில் இதன் பயன்பாடு உள்ளது.திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாக இது உள்ளது. இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால் பாலத்தின் சுவர்களில் பல இடத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'பாலத்தின் பல இடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. செடிகள் பெரிதாக வளர்ந்தால், தற்போது உள்ள விரிசல் பெரிதாகி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அமராவதி ஆற்றுப்பாலத்தை முறையாக பராமரிக்க வேண்டும்' என்றனர்.புதிய வீடுகள் கட்டிக்கொடுங்க!தமிழ்நாடு அரசு, கடந்த 1989ல் மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரை 4 வது வார்டு பகுதியிலுள்ள மக்களுக்கு, 50 வீடுகள் கட்டிக்கொடுத்தது.பொதுமக்கள் கூறியதாவது: கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளின் சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, மிகவும் சேதமடைந்தும், உறுதி இழந்தும் உள்ளது.இந்த வீடுகளில் வசிக்கவே அச்சமாக உள்ளது. ஆண்டுகள் பல கடந்த நிலையில், இங்கு வசிக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வசிக்கும் நிலை இங்கு உள்ளது.இது தவிர, இதர மக்கள் குடிசை அமைத்தும் வாழ்கின்றனர். கடந்த மாதம் முதல், தற்போது வரை பெய்துவரும் தொடர் மழையால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்குத்தீர்வாக, இங்கு வசிக்கும் அனைவருக்கும் புதிய வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.பழமரக்கன்றுகள் நடவுவனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று, தும்பலப்பட்டியிலுள்ள, விவசாயி சீதாபதிக்கு சொந்தமான நிலத்தில், மா, புங்கன், தேக்கு, எலுமிச்சை என, 592 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.'குடி'மகன்களால் தொல்லைஉடுமலை பசுபதி வீதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டி, மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கிக்கான பழைய கட்டடம், அதே வீதியில் உள்ளது.இக்கட்டடம் முன்பு, நாள்தோறும், இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் அரங்கேற்றும் அட்டகாசத்தால், அருகிலுள்ள குடியிருப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாபுகான் வீதி, பசுபதி வீதி வழியாக, இரவு நேரங்களில், பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், குடித்து விட்டு, மதுபாட்டில்களை, கூட்டுறவு வங்கி கட்டடத்தின் முன்பும், உட்புறத்திலும் வீசியெறிகின்றனர். இதனால், நாள்தோறும் பணிகளை துவக்கும் முன்பு, காலி மதுபாட்டில்களை அகற்றும் நிலைக்கு, வங்கி பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, பசுபதி வீதி டாஸ்மாக் மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும்; இரவு நேரங்களில், போலீசார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X