ஆசிரியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவுரை: பள்ளி எப்படியிருக்கணும்!பாதிப்புகளை தவிர்க்க டி.இ.ஓ., எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
00:16

பொள்ளாச்சி:''மழை காலத்தில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அறிவுரைகள் குறித்து தலைமையாசிரியர்கள் தினமும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்,'' என, கல்வி மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த, பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பருவமழை பெய்கிறது. ரோடுகளில் வெள்ளமாக மழைநீர் ஓடுகிறது. குளம், குட்டைகளும் நிரம்பி வருகின்றன. தொடர் மழையால், பள்ளிகளில் மழைநீர் தேங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.அதில், தொடர் மழையால் மரப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின், நகராட்சி அதிகாரிகள் வாயிலாக மழை நீர் வெளியேற்றப்பட்டது.இந்நிலையில், பள்ளிகளில் கல்வி மாவட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் தொடர் ஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளில், தொடர் ஆய்வு செய்யப்படுகிறது. பள்ளி வளாகத்துக்குள் இடிந்து விழும் கட்டடங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாமல் தடுப்பு அமைக்க வேண்டும்.மோசமான கட்டடம் அருகில், மாணவர்களை செல்ல கூடாது என தலைமையாசிரியர்கள் அறிவுறுத்துவதுடன், மாணவர்களை கண்காணிப்பும் செய்ய வேண்டும்.பள்ளி வளாகத்தில், ஆபத்தான நிலையில் அறுந்து தொங்கக்கூடிய மின் ஒயர்கள், கம்பங்கள் இருப்பின் அவைகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மழை பெய்து வரும் சூழலில், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.சுகாதாரத்துடன் பள்ளி வளாகம் இருப்பதுடன், கொசு உற்பத்தி ஆகாமல் கட்டுப்படுத்த கண்காணிப்பு செய்ய வேண்டும். கழிப்பிடம் பராமரிக்க வேண்டும். குடிநீர் வினியோகத்திலும் கவனம் ......செலுத்தி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி வளாகத்தில், பயன்பாடில்லாத பொருட்கள், டயர்களில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அத்தகைய பொருட்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மாணவர்கள் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்வது முறையாக மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகளில், முதலுதவி பெட்டி மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருந்துகளின் காலாவதி தேதியை கண்காணித்து அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாதுகாப்பினை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள், தினமும் ஆய்வு செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.கல்வி, சுயஒழுக்கம் அவசியம்ஊரடங்கு காலத்தில், 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்றனர். தற்போது, பள்ளிகள் செயல்படும் நிலையில், மாணவர்களை மொபைல்போன் ஆதிக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும். அதேநேரத்தில், 'குட் டச்', மற்றும் 'பேடு டச்' குறித்து கற்பிக்க வேண்டும்.கல்வியுடன், பண்பாடு, ஒழுக்கம், பெரியோருக்கு கட்டுப்படுதல், பள்ளிக்கு வெளியே மாணவ, மாணவியர் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்துக்கு கல்வி, சுயஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.இதையும் சொல்லி கொடுங்க!கொரோனா ஊரடங்குக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பள்ளிக்கு வரத்துவங்கியுள்ளனர். பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை காண முடிகிறது. பஸ் படிக்கட்டுகளில் தொங்கல் பயணம் செய்யக்கூடாது என்றும், படியில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், தெளிவுப்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X