ஜி.எச்., ரோட்டில் வாகன நிறுத்தம்: போக்குவரத்து நெரிசலால் சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
00:42

உடுமலை:அரசு மருத்துவமனை ரோட்டில், இருபுறங்களிலும், வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்தும் பிரச்னைக்கு, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அரசு மருத்துவமனை, வ.உ.சி., வீதியில், அமைந்துள்ளது. குறுகலான ரோட்டில், அமைந்துள்ள மருத்துவமனைக்கு, நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.மேலும், விபத்து உட்பட அவசர சிகிச்சைக்கு அழைத்து வரவும், முதலுதவிக்கு பிறகு, கோவை உட்பட மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்கு அழைத்துச்செல்லவும், ஆம்புலன்ஸ்கள் குறுகலான ரோட்டின் வழியாகவே செல்ல வேண்டும்.மருத்துவமனை அருகிலுள்ள, கச்சேரி வீதியில், சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என வரிசையாக, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. எனவே, அந்த ரோட்டில், எப்போதும் நெரிசல் இருக்கும்.இந்நிலையில், தற்போது, அரசு மருத்துவமனை முன், குறுகலான இடத்தில், இருபுறங்களிலும், கார் உட்பட நான்கு சக்கர வாகனங்களைநிறுத்திச்சென்றுவிடுகின்றனர்.மாற்று வழி இல்லாததால், ஆம்புலன்ஸ் உட்பட அவரசமாக செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன.பிற வாகனங்களும், அரசு மருத்துவமனையை கடந்து செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனையை ஒட்டி, ரோட்டின் இருபுறங்களிலும், வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, உரிய அறிவிப்பு பலகைகள் வைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கச்சேரி வீதியிலும், பார்க்கிங் விதிமுறைகளை கண்காணித்தால், தளி ரோடு வரை நெரிசல் குறைந்து, ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் எளிதில் பிரதான ரோட்டுக்குச்செல்ல முடியும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X