கோத்தகிரி:கோத்தகிரி கூக்கல்தொரை கிராமத்தில், குடியிருப்புக்குள் குட்டிகளுடன் கரடி புகுந்ததால், அச்சமடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு, மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கூக்கல்தொரையில், இரண்டு குட்டிகளுடன், தடுப்பு சுவரை தாண்டி குடியிருப்புக்குள் கரடி புகுந்துள்ளது.வெளியில் இருந்த மக்கள், கரடியை பார்த்து அச்சமடைந்து, வீட்டிற்குள் ஓட்டம் பிடித்து கதவை மூடிக்கொண்டனர். பிறகு, ஜன்னல் வழியாக சப்தம் போட்டதை அடுத்து, அங்கிருந்த கரடி, அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளது. மக்கள் கூறுகையில்,'வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.