வரலாற்றில் முதல் முறை தொடர்ந்து 22 நாள் நீர் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
03:01

வரலாற்றில் முதல் முறையாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, நேற்று, 22வது நாளாக உபரி நீர் திறக்கப்பட்டது.



வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே, கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், 70 சதவீதத்திற்கும் மேல் நிரம்பி இருந்தன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், நவம்பர் துவக்கத்திலேயே, குடிநீர் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.இதில், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்துக்கு ஏற்ப, தினமும், 500 கன அடி முதல் 3,000 கன அடி வரை உபரி நீர் திறந்து விடப்படுகிறது.



இம்மாதம் 7ம் தேதி முதல் நேற்று வரை, தொடர்ச்சியாக 22 நாட்கள் ஏரி திறக்கப்பட்டு, அரை டி.எம்.சி., அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து, தொடர்ச்சியாக, 22 நாட்கள் உபரி நீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆறு வழியாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,695 கனஅடி நீர், உபரிநீர் கால்வாயிலும், சோழவரத்தில் இருந்து வினாடிக்கு 1,415 கனஅடி உபரி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரத்து 535 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



--நமது நிருபர்-

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X