முட்டுக்காடு முகத்துவாரம் அகலம் 150 அடியாக அதிகரிப்பு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
முட்டுக்காடு முகத்துவாரம் அகலம் 150 அடியாக அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
04:28

சென்னை : அதிக நீரை வெளியேற்றும் வகையில், முட்டுக்காடு முகத்துவாரத்தின் அகலம் 150 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



தெற்கு பகிங்ஹாம் கால்வாய், முட்டுக்காடு அருகே கடலில் கலக்கிறது. வேளச்சேரி, சோழிங்கநல்லுார், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், பகிங்காம் கால்வாயில் பயணிக்கிறது. இரண்டு நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளதால், பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் அதிகரித்துள்ளது.

கடலிலும் அலையின் வேகம், அதிகமாக இருப்பதால், நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, முகத்துவாரத்தின் அகலத்தை 150 அடியாக நீர்வளத்துறையினர் அதிகரித்துள்ளனர். அங்கு ஐந்து பொக்லைன் வாகனங்கள் வாயிலாக அடைப்பை நீக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், எவ்வித சிக்கலும் இன்றி பகிங்ஹாம் கால்வாய் வழியாக வெள்ளநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X