கடலுார் : கடலுார் அருகே இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.கடலுார், வடக்கு ஒன்றியம், துாக்கணாம்பாக்கம் ஊராட்சி
ராசாபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர் அபினேஷ், கல்லுாரி மாணவர் பாலாஜி ஆகியோர் மலட்டாற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். தகவலறிந்த கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், நேரில் சென்று இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அரசின் சார்பில் மாணவர்கள் இருவரது குடும்பத்திற்கும் நிதியுதவி பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.