மதுரை : இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கமின்றி குளுமையாக காணப்பட்ட மதுரையில் நேற்று மதியம் வெயில் காணப்பட்டது.
நேற்று காலை முதல் வெயிலின்றி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிய நிலையில் மதியம் வெயில் ஏறியது. நேற்று முன்தினம் மிதமான சாரல் மழையே பெய்ததால் சராசரி மழை 6.41 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக இடையபட்டியில் 25, சிட்டம்பட்டி 22.6, கள்ளந்திரி 13.6, சோழவந்தான் 12, வாடிப்பட்டி 9, தனியாமங்கலம் 6.3, விரகனுார் 6, மேட்டுப்பட்டி 5.8, புலிப்பட்டி 5.6, மேலுார் 4, சாத்தையாறு அணையில் 3 மி.மீ. மழை பதிவானது.
பெரியாறு அணை நீர்மட்டம் 141.65 அடி, நீர் இருப்பு 7572 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 1847, வெளியேற்றம் 900 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 69.72 அடி, நீர் இருப்பு 5758 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 3284, வெளியேற்றம் 2618 கனஅடி.