வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டியில் குடியிருப்புகளில் தனியார் பிளாட்களில் மழைநீர் தேங்குவதால் மக்கள் தொடர்ந்து சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சாந்தி நகர், தேவர் தெருவில் தேங்கிய மழை நீரை பேரூராட்சி நிர்வாகம் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு நவ.,22 மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலியானார். ஆனால் இன்றுவரை வீடுகளைச் சுற்றியுள்ள நீரை வெளியேற்ற முடியவில்லை. பாலகுரு நகரில் 2 ஆண்டுகளுக்கு முன் தரமற்ற முறையில் அமைத்த 'பேவர் பிளாக்' சாலை, கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்துள்ளது. மழைநீர் வெளியேற நிரந்தர தீர்வு வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்துகின்றனர்.