பலப்படுத்தலாமே! கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
06:39

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் 342 கண்மாய்களும், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள 712 கண்மாய்கள் உள்ளன. பல ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு கிடந்ததுடன் பெரும்பாலான கண்மாய், ஊரணி, வரத்து கால்வாய் கரைகள் சேதமடைந்து வலுவிழந்து இருந்தன.அதிகாரிகளும் இதை சீரமைக்க முன்வருவதே இல்லை.



இந்தாண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரத்து கால்வாய்கள் வழியாக கண்மாய்கள், ஊரணிகள் நிரம்பி வருகின்றன. நரிக்குடி ஆனைக்குளம், எழுவணி, சிங்கநாதபுரம் கண்மாய் கரைகள், சென்னம்பட்டி வரத்துக் கால்வாய் கரை உட்பட பல்வேறு இடங்களில் கரைகள் வலுவிழந்து உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.



விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் உயர நல்ல தருணமாக இருக்கும் இந்த சூழலை தவறவிட்டால் மீண்டும் வறட்சியை சந்திக்க நேரிடும். கரைகளை பலப்படுத்த போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிரந்தர தீர்வு வேண்டும்ஆற்றுமணல், கிராவல் மண், குவாரிகளுக்கு வாகனங்கள் செல்ல பாதை ஏற்படுத்த பல்வேறு இடங்களில் கரைகளை சேதப்படுத்தி உள்ளனர். பருவமழைக்கு மழைநீர் அதிக அளவில் வரத்து இருந்தும் வலுவிழந்த பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மணல் மூட்டைகளை அடுக்கி முடிந்த அளவிற்கு தடுக்கின்றனர். நிரந்தர தீர்வு ஏற்பட போர்க்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காளீஸ்வரன், சமூக ஆர்வலர், நரிக்குடி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X