சிவகங்கையில் கனமழை; இதுவரை 5 பேர் பலி; 283 வீடுகள் சேதம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
சிவகங்கையில் கனமழை; இதுவரை 5 பேர் பலி; 283 வீடுகள் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
06:39

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 283 வீடுகள் சேதமடைந்துள்ளது.



வடகிழக்கு பருவமழை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. அனைத்து நீர் நிலைகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த சிற்றாறுகளான மணிமுத்தாறு, பாம்பாறு, உப்பாறு, பாலாறு, விருசுழியாறு உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கண்மாய்கள், குளம், ஊரணிகள் நிறைந்து மறுகால் பாய்கிறது.

இது வரை மழைக்கு மாவட்டத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதில் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் வீதம் 16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. கால்நடைகள் 9 இறந்து உள்ளன.இதில் 7 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு 1.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பாதியாக 262 வீடுகளும்,முழுமையாக 21 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதில் 262 வீடுகளின் உரிமையாளர்களுக்கு 10.74 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.முழுமையாக சேதம் அடைந்த 21 வீட்டு உரிமையாளர்களுக்கு 1.05 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை சேதம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X