சின்னமனூர் நகராட்சியில் தரமில்லாத ரோடு பணி; பொதுமக்கள் சிரமம் | தேனி செய்திகள் | Dinamalar
சின்னமனூர் நகராட்சியில் தரமில்லாத ரோடு பணி; பொதுமக்கள் சிரமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
07:09

சின்னமனுார் : சின்னமனுாரில் தரமில்லாத தார் ரோடு பணியால் சில நாட்களிலேயே கற்கள் பெயர்ந்துள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை எழுந்துள்ளது.



சின்னமனுார் நகராட்சி மின்நகர் பகுதியில் சில நாட்களுக்கு முன் தார் ரோடு அமைக்கப்பட்டது. தார் ரோடு அமைத்து சில நாட்களிலேயே, புதிய ரோட்டில் கற்கள் பெயர்ந்தன. இதனால் அந்த வீதிகளில் வசிப்போர் நடக்க முடியவில்லை. இந்த அவலத்திற்கு ரோடு அமைக்காமல் இருந்திருந்தால் சிரமம் இன்றி நடக்க முடியும் என மக்கள் புலம்புகின்றனர்.

மின்நகரில் பல வீதிகளில் இது போன்று தரமற்ற முறையில் தார் ரோடு பணி நடந்துள்ளது. வ.உ.சி. நகரில் பல வீதிகள், ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள வீதிகள் என பல இடங்களில் ரோட்டை தோண்டி கற்கள் பரத்தி பல மாதங்களாகி விட்டது. ஆனால் ரோடு பணி நடைபெறவில்லை.

நகராட்சியின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ரோட்டை ஆய்வு செய்வது அவசியம்.தரமில்லாத ரோடுபணியினை நகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாது போல் நடந்து கொண்டனர். இதனால் தரமற்ற முறையில் தார் ரோடு போடும் பணிகள் நடந்து வருகிறது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X