நீரில் முழ்கிய சுரங்கப்பாதை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
நீரில் முழ்கிய சுரங்கப்பாதை
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
07:11

எரியோடு : எரியோடு அருகே ரயில்வே சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் எரியோடு ஒத்தக்கடையில் இருந்து செங்கோட்டைபட்டிக்கு ரோடு செல்கிறது. வழியில் குறுக்கிடும் திண்டுக்கல் - கரூர் ரயில்பாதையில் இருந்த ஆளில்லாத கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும்பணி சில ஆண்டுகளாக நடக்கிறது.சுரங்கப் பாதையில் தரைமட்ட பணிகள் முடிந்து மேற்கூரை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக கிடப்பில் உள்ளது.இதனால் இங்கு மழை பெய்யும்போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.

இரு தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் தண்ணீர் பெருமளவில் தேங்கி சுரங்கபாதை பகுதி நீச்சல் குளம் போல உள்ளது.இதனால் இவ்வழியே ரோடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் குடியிருப்புகள் பல இருக்கும் நிலையில் யாரேனும் தவறி விழுந்து அசாம்பாவிதம் நடந்துவிடுமோ என அச்சம்அப்பகுதியினரிடையே உள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X