மானூர் பாலம் மழையால் சேதம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மானூர் பாலம் மழையால் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
07:15

பழநி : பழநியில் இருந்து பழைய தாராபுரம் சாலை கரூர், சேலம், தாராபுரம், திருப்பூர் ஆகிய நகரங்களுக்குச் செல்ல மானூர், நரிக்கல்பட்டி, அலங்கியம் கிராமங்கள் வழியாக ரோடு வசதி உள்ளது.

எந்நேரமும் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை பலவும் செல்கின்றன. தற்போது பழநி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பெய்ததால் சண்முக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் பெய்த மழைக்கு மானூர் அருகே பழைய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள 15 கண் பாலத்தின் இருபக்கவாட்டு சுவர்களும் சேதம் அடைந்துள்ளன.

ஈரப்பதத்தால் பாலத்தின் சுவர்கள் பலம் இழந்து, எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை சரி செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X