கொடைக்கானல் : கொடைக்கானல் நகர் மற்றும் ஏரியை கட்டமைத்தவர் சர் ெஹன்றி லெவின்ச்சின். இவரது 202 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் நகராட்சி எதிரே உள்ள சதுக்கத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.1870 மதுரை மாகாண ஆளுநராக இருந்து கொடைக்கானல் ஏரியையும், நகரையும் அழகு படுத்தினார். இன்று சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குவதற்கு இவரது முயற்சி அளப்பரியது என, பொதுமக்கள் தெரிவித்தனர்.