திண்டுக்கல் : திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஜெயராமன். நேற்று அவர் காரில் ஆர்.எஸ்.,ரோட்டில் சென்ற போது காரில் இருந்து திடீரென புகை வந்தது. டிரைவரும், ஜெயராமனும் காரில் இருந்து இறங்கிய சில நொடிகளில் கார் முழுதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.