பழநி : பழநியில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை நேற்று அதிகமாக இருந்தது.இந்நிலையில் நேற்று பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். சாரல் மழையில் நனைந்தபடி படிப்பாதை, வின்ச், ரோப் கார் வழியாக மலைக்கோயில் சென்றனர். கிரி வீதி சன்னதி வீதி பகுதிகளில் பக்தர்கள் சாரல் மழைக்கு விலகி நின்றனர்.