ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து கிலோ ரூ. 86 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.57 வரை விற்றது. இதற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.115 க்கு விற்றது.ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து இருந்ததால் விலை வேகமாக குறைந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் மழை பெய்ததால் நேற்று வரத்து குறைந்தது.
பல்வேறு மாவட்ட வியாபாரிகள் தக்காளியை போட்டி போட்டு ஏலம் எடுத்ததனர். இதனால் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.நேற்று 14 கிலோ தக்காளி பெட்டி அதிகளவாக ரூ.1,200 க்கு விற்றது. ஒரு கிலோ ரூ.86 ஆகும். மழை தொடரும் நிலையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.