மீண்டும் நிரம்பும் பரப்பலாறு அணை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மீண்டும் நிரம்பும் பரப்பலாறு அணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
07:22

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை இரண்டாம் முறையாக நிரம்பும் நிலையில் உள்ளது.

ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையின் உயரம் 90 அடி. தற்போது 86.5 அடி தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வினாடிக்கு 200 கன அடி நீர் வருகிறது. அதே அளவு நீர் நங்காஞ்சி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.இந்த நீர் இடையகோட்டை நங்காஞ்சி ஆறு நீர்தேக்கத்திற்கு செல்கிறது. இந்த நீர்த் தேக்கமும் நிரம்பும் தருவாயில் உள்ளது

நவம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால் நீர்மட்டம் 87 அடியானது. முன்னெச்சரிக்கையாக உபரி நீர் நவ.7 முதல் வெளியேற்றப்பட்டது. இதனால் பாசன குளங்கள் பலவும் நிரம்பின. அணையின் நீர்மட்டம் 76 அடியாக குறைந்தது. இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழையால் மீண்டும் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 86.5 அடியாக உள்ளது. மீண்டும் ஒரு முறை நிரம்பும் தருவாயில் உள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X